Gavitha / 2015 ஜூன் 17 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட 26ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், திருகோணமலை மாவட்டம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் சேவைகள் மன்றத்தின் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) கொழும்பு பெத்தகான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மன்னார் மாவட்டமும் திருகோணமலை மாவட்டமும் ஒன்றையொன்று மோதிக்கொண்டன. இரண்டு அணிகளும் 2:2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிவுற்றது.
பெனால்டி முறையில் 4:2 என்ற கோல் வித்தியாசத்தில் திருகோணமலை மாவட்டம் 2015ஆம் ஆண்டின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
26ஆது தேசிய விழாவின் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை, தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட அணிக்கான பதக்கமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளன.
5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025