2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆண்களுக்கான கூடைப்பந்தில் சென்றலைட்ஸ் சம்பியன்

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம், யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் நடத்திய, ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. 
இந்தச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை(14) கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது. 

இறுதிப்போட்டியில் ஜொலிஸ்டார்ஸ் அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நான்கு பாதிகளைக் கொண்ட இந்த இறுதிப்போட்டியின் முதற் பாதியாட்டத்தை சென்றலைட்ஸ் அணி, 16:13 எனக் கைப்பற்றியது.

தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது பாதிகளை 23:08, 14:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்லைட்ஸ் கைப்பற்றியது. 
இறுதி பாதியாட்டத்தில் சிறப்பாக ஆடிய ஜொலிஸ்டார்ஸ் அணி, 23:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. இறுதியில் சென்லைட்ஸ் அணி 69:57 புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகியது. 

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்றலைட்ஸ் அணியின்  டி.ஹர்சனும் தொடர்நாயகனாக ஜொலிஸ்டார்ஸ் அணியின் கே.சிவதாஸூம் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .