2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் அலவத்துகொடை சம்பியன்

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டித் தொடரில், அக்குறணை பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில், அலவத்துகொடை தேசியப் பாடசாலை இளைஞர் கழகம், 83 புள்ளிகளைப் பெற்று சம்பியனான தெரிவானது.

இதில், 78 புள்ளிகளை பெற்ற அக்குறணை ஜூனியர் அஸ்ஹாரியன் விளையாட்டுக் கழகம், இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட சிறந்த விளையாட்டு வீரர்களாக ஏ.ஏ.உமர்,டீ.பீ.ஜீ.எஸ்.தேவிந்த ஆகியோர் தெரிவாகினர்.

இருபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் எம்.எம்.சபீர் சிறந்த வீரராகவும் எச்.எம்.எஸ்.கே.செனெவிரத்ன சிறந்த வீராங்கனையாகவும் தெரிவாகினர்.

வெற்றிக் கேடயங்களை அக்குறணை உதவி பிரதேச செயலாளர் ஆர்.ஏ.விஜேசிங்க வழங்கி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .