2025 ஜூலை 05, சனிக்கிழமை

அகில இலங்கை கால்பந்தாட்டத்தில் சாஹிரா சம்பியன்

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டின், பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை கால்பந்தாட்டத் தொடர் 2014 இன், பிரிவு – 1 போட்டிகளின் சம்பியனாக, சாஹிரா கல்லூரி தெரிவாகியுள்ளது.

சாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நீர்கொழும்பு சென். மேரிஸ் கல்லூரி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, அவ்வணி சம்பியன் பட்டம் வென்றது.

ஆரம்பத்திலிருந்தே சாஹிரா கல்லூரி, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், கோல் போடும் சந்தர்ப்பங்களை சென். மேரிஸ் கல்லூரி தொடர்ச்சியாகப் பறித்து வந்தது. ஆனால் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில், மொஹமட் ஹூமைட் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது பாதியின் 17ஆவது நிமிடத்தில் எம். ஷபீர் மற்றொரு கோலைப் பெற்றுக்கொடுக்க, சாஹிரா கல்லூரி அணியின் வெற்றி உறுதியானது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல்களைப் பெறத் தவற, போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சாஹிரா கல்லூரி அணி சம்பியனானது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், கொழும்பு நாலந்தா கல்லூரியை வீழ்த்தி, கட்டுநேரிய சென். செபஸ்தியன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .