Sudharshini / 2015 ஜூன் 17 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (17) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20ஆவது மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில் ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயம் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மற்றும் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் பி.எம்.நௌசாத் என்ற மாணவன் இரண்டாமிடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் ஆர்.எம்.றிப்தி என்ற மாணவன்; முதலாமிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டனர்.
பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago