2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாகாணமட்ட விளையாட்டில் சாதனை

Princiya Dixci   / 2015 ஜூன் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ், ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20ஆவது மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள், இன்று புதன்கிழமை (17) கௌரவிக்கப்பட்டனர்.
 
இவ்விளையாட்டுப் போட்டி கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கிழக்குப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நடைபெற்று முடிந்த விளையாட்டுப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஏ.ஹாதிக் என்ற மாணவன் முதலாமிடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினையும் 13வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் எ.ஜே.எப். சனப் என்ற மாணவி முதலாமிடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினையும் பெற்றதுடன் பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டியில் எஸ்.எல். சர்மிலா இரண்டாம் நிலையை பெற்று அடைவுமட்டத்தையும் அடைந்தார்.

இப்பாடசாலை வரலாற்றில் மகாண மட்ட விளையாட்டுப்போட்டியிகளில் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களான ஆர்.ஹாறூன், ஜே.பஸ்மிர் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, இன்று புதன்கிழமை(17) நடைபெற்றது.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சாதனையாளர்களுடன் இணைந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் வீரர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தமையும் 
குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .