Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
சம்மாந்துறை ஜூனைற்றி விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சம்மாந்துறை லைட்னிங் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவானது.
அணிக்கு 7 பேரைக் கொண்ட 5 ஒவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி, சம்மாந்துறை அல்-அர்சாத் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் புதன்கிழமை (17) நடைபெற்றது.
ஜூனைற்றி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.ஆஷிக் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ரியல்நஜா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, 5 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 40 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லைட்னிங் விளையாட்டுக் கழகம் 4.1 ஒவர்கள் நிறைவில் குறித்த இலக்கையடைந்து 6 விக்கெட்களால் வெற்றியை தனதாக்கி கொண்டது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், அல்-அர்சாத் முஸ்லிம் வித்தியாலய பழைய மாணவரும் மாஹிர் பவுண்டேசன் அலுவலக இணைப்பாளருமான எம்.ஜெ.எம்.இர்பான், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வெற்றியீட்டிய கழகத்துக்கான சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தனர்.


5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025