2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் முதல் முறையாக ஒலிம்பிக்

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் முதல் தடவையாக ஒலிம்பிக் தின நிகழ்வுகள், நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றன. மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். குறித்த ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.

பொது விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு தேசியக்கொடி மற்றும் ஏனைய கொடிகளும் வைபவ ரீதியாக ஏற்றி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வுகள் இடம்பெற்றதோடு ஏற்கெனவே இடம்பெற்ற சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றுதல்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பாடசாலைகளுக்கு விளையாட்டுத்துறை தொடர்பான புத்தகப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, விளையாட்டு விவகார அமைச்சின் பணிப்பாளர் ருவன் சந்திர, இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் உப தலைவர் தேவ ஹென்றிக், தேசிய ஒலிம்பிக் சங்க செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேசச் செயலாளர்கள், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள்,திணைக்கள பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .