Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரத்தீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகத்தின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அருள்மணி விளையாட்டுக்கழகம இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவாகியது.
திங்கட்கிழமை (22) மாலை, மண்டூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் களுவாஞ்சிகுடி நியுஒலிம்பிக் விளையாட்டுக்கழகமும் அருள்மொழி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.
10 ஓவர்கள் கொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சாம்பியனாக தெரிவாகியது.
இதன்போது சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழக வீரர் கே.மதன், சிறந்த தொடராட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்ட களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் அணி வீரர் எஸ்.லம்போ ஆகியோருக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற அணிக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதி பரிசளிப்பு நிகழ்வு அருள்மொழி விளையாட்டுக்கழகத்தின் தலைவர் க.வேந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


5 hours ago
8 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Nov 2025