Princiya Dixci / 2015 ஜூன் 24 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அணி வெற்றி பெற்றது.
பாட்டாளிபுரம் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியை எதிர்த்து ஆடிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அணி 26 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதேச செயலகங்கள், திணைக்களங்கள் உள்ளடங்களாக 19 அணிகள் போட்டியிட்டன.
உதவி மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நேற்று நடைபெற்ற இறுதி நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி ஜே.திருச்செல்வம், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன் ஆகியோர் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
வருடாந்தம் நடைபெறும் வகையில் இவ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







5 hours ago
8 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Nov 2025