2025 ஜூலை 05, சனிக்கிழமை

அமரர் தமிழ்வாணன் ஞாபகார்த்த கிண்ணம் - 2015

George   / 2015 ஜூன் 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட, அமரர் தமிழ்வாணன் ஞாபகார்த்த கிண்ணம் - 2015 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை டொல்பின் அணி வெற்றி பெற்று, கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

அணிக்கு 11 பேர் கொண்ட, 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை(21) சேனைக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் வின்னர் விளையாட்டுக் கழக தலைவர் கே.செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 24 கழகங்கள் பங்கு கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியில், திருக்கோயில் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகமும் மோதின.

போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி, 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருக்கோயில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம், 9.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை பெற்றுத் தோல்வியடைந்தது. இதன்படி, கல்முனை டொல்பின் கழகம் சம்பியனாகத் தெரிவானது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .