George / 2015 ஜூன் 24 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யு.எஸ்.எயிட் மற்றும் சேவா லங்கா நிறுவனம் இணைந்து நடத்திய, அணிக்கு 6 ஓவர்கள் கொண்ட மாகாண மட்ட மென்பந்து கிரிக்கெட் தொடரில், சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் சம்பியனாகியது.
'மீள்குடியேறிய மக்களின் மீள் திறனை கட்டியெழுப்பல்' என்னும் செயற்றிட்டத்தின் கீழ், சேவாலங்கா அமைப்பினால் வடக்கில் பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக இந்தக் கிரிக்கெட் போட்டி, மன்னார் காக்காய் குளம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணியும் மன்னார் காக்காய்குளம் அணியினரும் மோதினர்.
நாணயற்சுழற்சியில் வென்ற மன்னார் காக்காய்குளம் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி, 8 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி, 6.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
சுற்றுப்போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக தெல்லிப்பழை பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளன அணியின் எஸ்.ரகுவரன் தெரிவானதுடன் சிறந்த துடுப்பாட்ட வீரனாக மன்னார் காக்காய்குளம் அணியின் ஆர்.இம்ரான் தெரிவுசெய்யப்பட்டார்.
5 hours ago
8 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Nov 2025