Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு நகரில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் கல்லூரிக்கும் மற்றும் மெதடிஸ்த கல்லூரிக்குமடையிலான பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி இவ்வருடத்துக்கான சம்பியானகத் தெரிவு செய்யப்பட்டது.
இரு அணிகளுக்குமிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது.
இதன்போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி, 39.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மிக்கேல் கல்லூரி அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற மத்திய கல்லூரி அணிக்கு கிண்ணமும் 5,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரியைச் அணியைச் சேர்ந்த அபிஷேக், ஆட்ட நாயகனாக மிக்கேல் கல்லூரியைச் அணியைச் சேர்ந்த நிலுசாந், சிறந்த பந்து வீச்சாளராக மத்திய கல்லூரியைச் சேர்ந்த விகிர்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கிக் கௌரிக்கப்பட்டனர்.
வெற்றி இலக்குக்கு 4 ஓட்டங்கள் தேவையான நிலையில் 50ஆவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சின்போது அடிக்கப்பட்ட பந்துக்கு 4 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் மிக்கேல் கல்லூரி அணி சம்பியனானது.
இது தொடர்பான முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் நடுவர்களிடமே நிலைமை ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிப்பந்தில் நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டதாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்டது.
எனினும் தமது களத்தடுப்பாளர்கள் குறித்த பகுதியில் இருந்ததாகவும் நான்கு ஓட்டத்தினை தடுக்ககூடிய வாய்ப்பு இருந்தபோதிலும் புனித மைக்கேல் கல்லூரி ஆதரவாளர்கள் தமது வெற்றியை தடுத்துவிட்டதாக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி வீரர்கள் தெரிவித்தனர்.
எனினும், பந்து எல்லைக்கோட்டை நோக்கிச்சென்றபோது அப்பகுதியில் நின்ற ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததனால் போட்டி தொடர்பில் இரு பாடசாலை ஆதரவாளர்களிடையே முரண்பாடுகள் எழுந்தன.
இறுதிப்பரிசளிப்பு நிகழ்வினை மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பகிஸ்கரித்து மைதானத்தினை விட்டு வெளியேறிச்சென்றனர்.
தொடர்ச்சியாக 3 வருடங்கள் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று வந்த நிலையில் இப்போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago