2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் முதலிடத்தில்

Thipaan   / 2015 ஜூன் 29 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் ஜோர்ஜ் வெப்ஸர் தரவரிசையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் நடவடிக்கையை சென்ரல் விளையாட்டுக்கழகம் மேற்கொள்கின்றது.

50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் 5 புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் 3 புள்ளிகள், இருபது – 20 வெற்றியீட்டினால் 2 புள்ளிகள் இதற்கு வழங்கப்படுகின்றது.

இதனைவிட பெறப்படும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி அணி, இந்தாண்டு இதுவரையில் பங்குபற்றிய 9 போட்டியில் 8 போட்டிகளில் வெற்றியீட்டி 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம் 11 போட்டிகளில் பங்குபற்றி 7 போட்டிகளில் வெற்றிபெற்று 51.68 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், ஸ்ரீகாமாட்சி அணி 8 போட்டிகளில் பங்குபற்றி 5 போட்டிகளில் வெற்றியீட்டி 37.68 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

37.13 புள்ளிகளுடன் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 4 ஆம் இடத்திலும், 36.76 புள்ளிகளுடன் ஹாட்லி யைறீஸ் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .