Thipaan / 2015 ஜூலை 02 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
பாடும்மீன் கிரிக்கெட் சமர் என வர்ணிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் அணியினரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர மணிக்கூட்டக் கோபுரத்திலிருந்து அணியினர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சான்றிதழ்கள் வழங்கிய கௌரவிக்கப்பட்டதோடு பதக்கங்களும் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
பணப்பரிசாக ஆட்டநாயகனுக்கு 50,000 ரூபாய் மற்றும் அணியினைச் சேர்ந்த ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
இதன்போது விளையாட்டத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட ஒருதொகுதி கிரிக்கெட் உபகரணங்கள் பயிற்றுவிப்பாளரிடம் வழங்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் ஆர். வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார், பழைய மாணவர் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவி முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.
இப்போட்டிக்கு தேசிய அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை 250,000 ரூபாய் வழங்கி அனுசரணை வழங்கியது.
வெற்றி பெற்ற அணியினர் இன்று மதிய உணவை சத்துருக்கொண்டான் விசேட தேவையுடைய சிறுவர்களுடன் இணைந்து உட்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago