2025 நவம்பர் 19, புதன்கிழமை

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அணிகளுக்கு 18 தங்கப்பதக்கங்கள்

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

சிகான் கே.இராமச்சந்திரன் முதலாவது ஞாபகார்த்த தேசிய கராட்டி சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அணிகள் 18 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 43 பதக்கங்களை பெற்றுக் கொண்டதாக அம்பாறை மாவட்ட பிரதம போதனாசிரியர்  சென்சி கே.கேந்திரமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் ஒழுங்கமைப்பில கடந்த 27ஆம் திகதி காலி வெலிகம நகர மண்டபத்தில் இடம் பெற்ற சுற்றுப்போட்டிகளிலேயே தங்களது மாணவர்கள் பங்குபற்றி 43 பதக்கங்களை பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

நடைபெற்ற சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் லக்ஸ்மன் யாபாஅபேவர்த்தன கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கங்களை வழங்கி வைத்தார்.

இலங்கை ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் ஒழுங்கமைப்பில்  சிகான் கே.இராமச்சந்திரனின் முதலாவது ஞாபகார்த்த தேசிய கராட்டி சுற்றுப்போட்டியாக இடம்பெற்ற போட்டிகளில் தேசிய ரீதியாக 1,300 மாணவர்கள்  கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X