Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Administrator / 2015 ஜூலை 30 , பி.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3 வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது.
இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
கிறாஸ்கோப்பர்ஸ், சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, திருநெல்வேலி கிரிக்கெட் அணி, ஹாட்லி ஆகியன ஒரு பிரிவாகவும், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், சென்ரல், யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, விங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவாக போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.
மொத்தமாக 38 போட்டிகள் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
ஜே.பி.எல். போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் திருநெல்வேலி கிரிக்கெட் அணியை எதிர்த்து கிறாஸ்கோப்பர்ஸ் அணியும், 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணியை எதிர்த்து சென்ரல் விளையாட்டுக்கழக அணியும் மோதவுள்ளன.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை எதிர்த்து ஜொனியன்ஸ் அணியும், 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் விங்ஸ் அணியை எதிர்த்து பற்றீசியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago