Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகளவிலான சைக்கிளோட்டிகளின் பங்குபற்றலோடு இடம்பெற்ற இப்போட்டிகள், பார்வையாளர்களின் வரவேற்பையும் வென்றிருந்தன.
விகாரமகாதேவி பூங்காவை அண்டிய, தட்டைக் களத்தில், 2.2 கிலோமீற்றர்களைக் கொண்டதாக இப்போட்டிகள் இடம்பெற்றன.
இத்தொடரில், ஆண்களுக்கான உயர் பிரிவில், விமானப்படையைச் சேர்ந்த ஜீவன் ஜெயசிங்க வெற்றிபெற்றார். 55:05:00 நிமிடங்களில் அத்தூரத்தைப் பூர்த்தி செய்தே, அவர் சம்பியனாகத் தெரிவாகியிருந்தார். துஷான் ராஜபக்ஷ, கிஹான் புஸ்பகுமார ஆகியோர் அடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டனர். இப்பிரிவில் 41 பேர் பங்குபற்றியிருந்தனர்.
ஆண்களுக்கான உயர் பிரிவு தவிர, பெண்களுக்கான சிரேஷ்ட பிரிவு, கனிஷ்ட பிரிவு, ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவு, கனிஷ்ட பிரிவு ஆகியவற்றுக்கான போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.
இலங்கை சைக்கிள் சம்மேளனத்தினால் இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago