2025 ஜூலை 05, சனிக்கிழமை

டொனவன் அன்ட்றீ கிண்ணம்: நரம்மல வி.க சம்பியன்

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொனவன் அன்ட்றீ கிரிக்கெட் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக, நரம்மல விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடியுள்ளது. அம்பலாங்கொடை கெஸ்டோ விளையாட்டுக் கழகத்துக்கெதிராகவே இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நரம்மல விளையாட்டுக் கழகம், பதும் குணதிலகே 100, டில்ஹார லோரன்ஸ் 46, சமல் பெரேரா 36 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் நளின் பண்டிதரத்னே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தனது முதலாவது இனிங்ஸில் விளையாடிய கெஸ்டோ, தமில் நிலங்கவின் 46, சாலிய தென்னக்கோனின் 31 ஓட்டங்களின் துணையோடு, 164 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் உதாரண ஜெயமால் 3, சமல் பெரேரா 2, தனுஷ்க சந்துருவன் 2 என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நரம்மல வி.க., 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டிக்கான நேரம் முடிவடைந்தது. இதனடிப்படையில், முதல் இனிங்ஸில் அதிக ஓட்டங்களைப் பெற்றதன் அடிப்படையில், நரம்மல விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .