2025 ஜூலை 05, சனிக்கிழமை

மத்திய மாகாண மேசைப் பந்து போட்டி முடிவுகள்

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் நடாத்தப்பட்ட மேசைப் பந்து சம்பியன்ஷிப் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. தொலுவவிலுள்ள ஜகத் ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.


இத்தொடரின் ஆண்கள் பகிரங்கப் பிரிவில், திலின விஜேசிரியை 11-9, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்ட உதய ரணசிங்க, சம்பியன் பட்டம் வென்றார்.

பெண்கள் பகிரங்கப் பிரிவில் றிட்மி கரடனாராச்சியை எதிர்கொண்ட சமதி ஹெட்டியாராச்சி, 14-12, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டு, சம்பியன் பட்டம் வென்றார். 15 வயதுப் பிரிவில், ஆண்களில், ஷகில கருணாரத்னவை எதிர்கொண்ட சி.எம் குணசேகர, 11-8, 11-6, 15-13 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். பெண்களுக்கான பிரிவில், சமதி ஹெட்டியாராச்சியை எடிர்கொண்ட தனுஷி றொட்ரிகோ, 11-4, 4-11, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

18 வயதுப் பிரிவில், ஆண்களில் டினேஷ் கவிஷ்கவை எதிர்கொண்ட உதய ரணசிங்க, 8-11, 11-7, 12-10, 4-11, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். பெண்களில் தனுஷி றொட்ரிகோவை எதிர்கொண்ட பிரவீன் சில்வா, 9-11, 11-9, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .