Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 30 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண 2025 மின்னொளி சுற்றுப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நடைபெறும் என அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.எம்.றஷீட் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் அப்துல் அஸீஸ் அன் சன்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெறும் 2025 மின்னொளி உதைபந்தாட்டப் போட்டி தொடர்பாக செவ்வாய்க்கிழமை (29) அன்று இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வந்தது.குறித்த மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட நடுவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னின்று நடத்தி வந்தன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கல்முனை கல்வி வலயங்களுக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளில் நடைபெற உள்ள இரண்டாம் தவணைப் பரீட்சையை கருத்தில் கொண்டும் மாணவர்களின் கல்வி நலனை அடிப்படையாக கொண்டு எம்மால் நடாத்தப்படும் சுற்றுப்போட்டியின் பிரதான அணுசரணையாளர் மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சமூக சேவகர் அப்துல் அஸீஸ் அப்துல் கபீல் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இச் சுற்றுப் போட்டி தொடரானது 2025.08.03 அன்று முதல் நடைபெறும் போட்டிகளைத் தொடர்ந்து ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை இரண்டாம் தவணை பரீட்சைகள் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சுற்றுப் போட்டிக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் இப்போட்டிகள் மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்தும் கிழக்கு மாகாண முன்னணி கழகங்கள் விளையாடும் மாபெரும் இம்மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை சிறப்பாக நடத்த இச்சுற்று போட்டியை காண வருகின்ற பார்வையாளர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மேற்படி விடயம் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.கே.ரஹ்மானும் பங்கேற்று விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
13 minute ago
25 minute ago
27 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
27 minute ago
27 minute ago