R.Tharaniya / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025க்கு இலங்கை அணிக்கு அனுசரணை வழங்க Meadowlea மெடலோவ மாஜரின் , போச்சுன் உணவு உற்பத்தி தேங்காய் மற்றும் பாம் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனி முன்வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 16 அன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கழகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அனுசரணையாளர் அறிவிக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 30 முதல் நவம்பர் 02 வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆடப்படவுள்ள இச்சுற்று போட்டியின் போது இலங்கை மகளிர் அணியுடன் இந்நிறுவனம் பெருமையுடன் கைகோர்க்க உள்ளது.
எதிர்வரும் சுற்றுப் போட்டியின் போது எமது மகளிர் அணிக்கு வலுவூட்டுவதற்காக MeadowLea முன்வந்துள்ளமை தான் விரும்பிய நுகர்வோர் மத்தியில் தனது வர்த்தக நாமத்தை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான மேடையையும் அதற்கு வழங்கியுள்ளது. என்று இக் கூட்டாண்மை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் திரு உபுல் நவரட்ன பண்டார தெரிவித்தார்.
இச் சுற்றுப் போட்டியின் முதற் சுற்றில் ஏழு போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளமை சர்வதேச அரங்கில் வலுவான பிரபல்யத்தை MeadowLea க்கு வழங்கும்.
எமது நாட்டில் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட் தொடர்ந்து திகழ்வதோடு பெண்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் தேசிய பெருமை ஆகிய இரு அசைக்கமுடியாத தூண்களின் காப்பாளராக MeadowLea முன்னின்று உழைத்து வருகிறது.
மகளிர் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு ஆதரவளிப்பது. இளம் பெண் வீராங்கனைகளுக்கு வலுவூட்டி அவர்களுடைய அசாத்திய திறமையை உலகிற்கு காண்பிக்க உதவ எமக்கு இடமளிக்கிறது.
என இக் கூட்டாண்மை குறித்து Pyramid wilmar Private சந்தைப்படுத்தல் ஆலோசகரான ஹிராந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
உலகக்கிண்ணம் ஜ.சி.சி மகளிர் கிரிக்கெட் அணியின் முதலாவது போட்டித் தொடர்
செப்டம்பர் 30 - இலங்கை - பங்களதேஸ் - இந்தியாவில் நடைபெறும்.
அக்டோபர் 01 அவுஸ் - நியூசிலாந்து - இந்தியாவில்
அக்டோபர் 02 பங்கள - பாகிஸ்தான் -கொழும்பில்
அக்டோபர் 03 இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா - இந்தியாவில்
ஒக்டோபர் 04 அவுஸ்- இலங்கை - கொழும்பு
அக்டோபர் 05 இந்தியா - பாகிஸ்தான் - கொழும்பு
அக்டோபர் 06.நியூசிலாந்து - பங்களாதேஷ் இந்தியாவில்
அக்டோபர் 07 இங்கிலாந்து - பங்களாதேஷ் இந்தியாவில்
அக்டோபர் 08 அவுஸ் - பாகிஸ்தான் - கொழும்பில்
அக்டோபர் 09 இந்தியா - தென்ஆபிரிக்கா- கொழும்பு
அக்டோபர் 10 நியூசிலாந்து - பங்களாதேஷ் - இந்தியாவில்
அக்டோபர் 11 இங்கிலாந்து -இலங்கை -இந்தியாவில்
அக்டோபர் 12 தென் ஆப்பிரிக்கா- அவுஸ்- இந்தியாவில்
அக்டோபர் 13 தென்ஆபிரிக்கா -பங்களாதேஷ் - இந்தியாவில்
அக்டோபர் 14 நியூசிலாந்து - இலங்கை - கொழும்பில்
அக்டோபர் 15 இங்கிலாந்து - பாகிஸ்தான் கொழும்பில்
நவம்பர் 02 இறுதி தொடர் கொழும்பில்


46 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago