2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

24ஆவது படைப்பிரிவின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஜூலை 30 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்ட 24ஆவது இராணுவ படைப்பிரிவினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை காலை வட்ட விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை தன்வசமாக்கிக் கொண்டதுடன் பாடசாலை மட்டத்தில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி சம்பியனானது.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இனநல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை (29) அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா பிரதம அதிதியாகவும், பிரிகேடியர் எச்.கே.பி.பீரிஸ், பிரிகேடியர் வண்ணியாராச்சி மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பதிவாளர் அப்துல் சத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பாடசாலை மட்டங்களுக்கிடையில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கல்முனை ஸாகிரா கல்லூரியும், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மஹாவித்தியாலயமும் தெரிவாகின.

அணிக்கு 11 பேர் 10 பந்துப்பரிமாற்றங்ககளைக் கொண்ட இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம் நிர்னயிக்கப்பட்ட பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 08 இலக்குகளை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிராக் கல்லூரி எந்தவித இலக்குகள் இழப்பின்றி 6 பந்துப்பரிமாற்றங்களில் வெற்றி இலக்கை மிக இலகுவாகப் பெற்று சம்பியனானது.

கழகங்களுக்கிடையில் அணிக்கு 11 பேர் 12 பந்துப்பரிமாற்றங்கள் கொண்டமைந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை காலை வட்ட அணியும், பொத்துவில் கோல்ட் ஸ்டார் அணியும் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை காலை வட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட பந்துப்பரிமாற்ற முடிவில் 02 இலக்குகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொத்துவில் கோல்ட் ஸ்டார் அணியினர் 12 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .