2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

KPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

Freelancer   / 2023 மே 21 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

 நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வருடாந்த நடத்திவரும் கேபிஎல்( KPL) எனும் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டி நேற்று முன்தினம்(20) கல்முனை உவெஸ்லி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கழகத் தலைவர் ரி.கமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கல்முனையின் பத்து பிரபலமானமான அணிகள் கலந்து கொள்கின்றன .

எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி இறுதிப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அணிக்கு 12பேர் கொண்ட 10 ஓவர் கடின பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி லீக் முறையில் நடத்தப்பட்டு வருகின்றது . முதலாவது கன்னிப் போட்டியில் பிரபல கழகமான ஜெகநாத்தின்  ஈஸ்டர்ன் ரோயல்  அணியும், எஸ் பி ஜி அணியினரும் மோதிக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X