R.Tharaniya / 2025 ஜூன் 02 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின்40 ஆண்டு கால வரலாற்றில் முதல் தடவையாக இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01) அன்று கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய இல்லங்களுக்கும்,வீரர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.
இதன்போது கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான எச்.எல். பஷீர் (ஷர்க்கி), பணிப்பாளர் சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். இத்ரீஸ் (ஸஹ்வி), கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். றமீன் (மதனி) மற்றும் ஏனைய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago