Shanmugan Murugavel / 2025 ஜனவரி 30 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பு. கஜிந்தன்
 
இந்தியா மதுரையில் நடைபெற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில்  மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்துக்குகு முன்பாக புதன்கிழமை( 28) இடம்பெற்றது.
 
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சிவலீமன் சிலம்ப கழக மாணவர்களும் பாபு இஷின் ரியூ கராத்தே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கிய 20 பேர் கொண்ட குழு இந்தியா மதுரையில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் பங்குபற்றினர்.
 
போட்டியில் பங்கு பற்றிய வடக்கு மாணவர்கள் 36 முதல் இடங்களையும் 08 இரண்டாவது இடங்களையும், 05 மூன்றாவது இடங்களையும் பெற்றுக்கொண்டதுடன் 95 கேடயங்களை தம் வசமாக்கிக்கொண்டனர்.
20 minute ago
1 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
30 Oct 2025