Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அப்துல் பாஸித்
விளையாட்டுத் திறன்களைக் கொண்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் கிராமிய மட்டத்தில் தோற்றம் பெறுவார்களாயினும், அவர்களின் திறன்களை இனங்காணுவதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் பொருத்தமான முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்படாமையால் விளையாட்டு வீர. வீராங்கனைகள் போட்டித் தன்மையுடன் கூடிய விளையாட்டுக்களில் முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் நாடு முழுவதும் பரந்து வதியும் இயற்றிறன்களால் நிறைந்த பிள்ளைகளை இனங்கண்டு, விஞ்ஞான முறைமைகளுக்கு ஏற்ப தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை இலக்காகக் கொண்டு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அமுல்படுத்தப்படும் திறன்களை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டத்தை நாடு முழுவதும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஷேட தேவையுடைய விளையாட்டு வீர, வீராங்கனைகள் மீதும் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது. கிராம உத்தியோகத்தர் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவு, மாவட்ட மட்டம் ஆகிய மூன்று கட்டங்களாக இத்தெரிவு நடைபெறவுள்ளது.
மேற்படி ஒவ்வொரு கட்டத்தின் கீழ் விளையாட்டு வீர, வீராங்கனைகள் இனங்காணப்படவுள்ளனர். இதனடிப்படையில் இறக்காமம் 1, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கான வீர, வீராங்கனைகளை தெரிவுப் பரிசோதனைகள் அண்மையில் இறக்காமம் அஷ்ரப் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இம் முதலாம் கட்டத் தெரிவில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் விளையாட்டில் ஈடுபட்டுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகளை மற்றும் விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீரர்கள் இனங்காணப்பட்டு மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
பிரதேச மட்ட வீரர்களை தெரிவு செய்யும் முதலாம் கட்ட தெரிவுகள் கிராம உத்தியோத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எச்.பி. யசரட்ன தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இறக்காமம் 03, 04, 06, 07, 08, 09 ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களான யூ.எல். அமீர், எம்.எல். கிஷோர் ஜஹான், எஸ்.எல். ஹம்ஷா, எம்.ஜே.எம். அத்தீக் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் பிரிவு வீரர்களை ஒருங்கிணைத்தனர்.
விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஏ. இம்றுபாஸ்கான், இளைஞர் சேவை அதிகாரி ஏ.ஆர் .றியாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ. ஹஸ்ஸான் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோர் பிரதேச மட்ட வீரர்களின் விளையாட்டுத் திறன்களை இனங்காணும் தெரிவு பரிசோதனைகளை நடாத்தி வைத்தனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago