ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கல்முனை பிரதேச செயலக தேசிய இளைஞர் கழகத்தின் கால்பந்தாட்ட அணி தகுதிபெற்றது.
பதுளை வின்சென்ட் டயஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், காலி மாவட்ட இளைஞர் கால்பந்தாட்ட அணியை வென்றே கல்முணை பிரதேச செயலக தேசிய இளைஞர் கழகத்தின் கால்பந்தாட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
அந்தவகையில், மாத்தறையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பதுளை மாவட்ட இளைஞர் கால்பந்தாட்ட அணியை கல்முனை பிரதேச செயலக தேசிய இளைஞர் கழகத்தின் கால்பந்தாட்ட அணி எதிர்கொள்ளவுள்ளது.
33 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago