Shanmugan Murugavel / 2022 ஜூலை 17 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகம் ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றும் இம்ரான் பிறீமியர் லீக் இருபதுக்கு - 20 கடினபந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
நிந்தவூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தை வென்றே இறுதிப் போட்டிக்கு பிளாஸ்டர் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜிம்கானா விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பிலீடுபட்டது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஏ.என்.எம். ஆபாக் 41, அணித்தலைவர் எம்.ஜே.எம். தாஜுதீன் 19 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 141 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜிம்கானா விளையாட்டுக் கழகம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களையே பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், நிலாம் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக ஏ.என்.எம். ஆபாக் தெரிவு செய்யப்பட்டார்.
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026