Janu / 2026 மே 17 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேசியாவில் எதிர்வரும் மே 21-ஆம் திகதியிலிருந்து 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச '2எஸ் இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்' (2s International Open Karate Championship) போட்டியில் கலந்துகொள்ளச் செல்லும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ருக்குனுதீன் நைலா (RUKKUNUTHEEN NYLA) உள்ளடங்களாக, சாதனை படைத்த மாணவர்கள் 5 பேரை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) காலை வி.எம்.சி.டி (V.M.C.T) கலைமன்றத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தின் பிரபல கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஜஸ்மின் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், நகர சபை உறுப்பினர் முஹமட் இம்சாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
14 வயதுப் பிரிவில் களம் காணும் நைலா:
கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவியான ருக்குனுதீன் நைலா, மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில், 52 கிலோ எடைப் பிரிவின் கீழ் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள உள்ளார்.
மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் வசித்து வரும் இவர், மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவி ஆவார். இப்போட்டியில் வட மாகாணத்திலிருந்து கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ள ஐந்து மாணவர்களில் இந்த மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்களுக்கு கௌரவம்:
தேசிய ரீதியிலான கராத்தே போட்டிகளில் பங்குபற்றிப் பல்வேறு இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்த ஐந்து மாணவர்கள் இந்நிகழ்வின் போது பாராட்டிப் பலகையிட்டுச் சிறப்பிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்காக மலேசியா செல்லவுள்ள மாணவி ருக்குனுதீன் நைலாவிற்கு இதன்போது விசேட கௌரவமும் வாழ்த்துகளும் வழங்கப்பட்டன.
லெம்பேர்ட் றொஸரியன்






6 minute ago
13 minute ago
22 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
22 minute ago
33 minute ago