2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையணியில் மட்டு வீரர் விஜித் அனக்சன்

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். நூர்தீன்

இலங்கை 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ அணியின் இளம் வீரர் விஜித் அனக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெற்காசிய கால்பந்தாட்டத் தொடரானது இம்முறை இலங்கையில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தன்னாமுனை புனித ஜோசேப் கல்லூரியின் மாணவரான அனக்சன் சிறுவயது முதலே பாடசாலை மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை பல போட்டிகளில் விளையாடி அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதுடன், தனது அணியின் வெற்றிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .