2025 ஜூலை 02, புதன்கிழமை

இவ்வாண்டுக்கான வர்த்தக கரப்பந்தாட்டத் தொடர்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை இலங்கையின் வர்த்தகத் துறையினரிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கிலும், நிறுவனங்களிடையே புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையிலும், இலங்கை வர்த்தக கரப்பந்தாட்ட சங்கம், வருடாந்த வர்த்தக கரப்பந்தாட்டத் தொடரை இவ்வாண்டிலும் ஏற்பாடு செய்துள்ளது.

வர்த்தக நிறுவனங்களில் சேவையாற்றும் ஊழியர்களின் மனதில் ஏற்படக்கூடிய ஒரே விதமான தன்மையை இல்லாதொழித்து, மன அழுத்தத்தைக் குறைத்து, தொழிலில் மாத்திரமன்றி விளையாட்டுக்களிலும் அவர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு சிறந்த மன நிலையைப் பெற்றுக்கொடுப்பது இத்தொடரின் நோக்கமாகும்.

இத்தொடரில் ஆண், பெண் இரு பாலாரும் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. 2012ஆம் ஆண்டில் 50 அணிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடரானது தற்போது தனது எட்டாவது ஆண்டு நிகழ்வைக் கொண்டாடுகிறது. இம்முறை ஆண்கள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாண்டுக்கான தொடரை ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பொது முகாமையாளர்லக்மால் ஜயசிங்க தலைமையிலான குழுவுடன் இலங்கையில் புகழ்பெற்ற பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றும் ஒரு நிர்வாகக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த அமைப்புக்களைச் சேர்ந்த ஊழியர்கள் இத்தொடரில் பங்கேற்புச் செய்வதற்கு தகுதியுடையவர்களாவர். ஆரம்பகட்ட போட்டிகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் செப்டெம்பர் 7, 8ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டிகள் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக அரங்கில் நவம்பர் 2, 3 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

இத்தொடருக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆகும். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0710 682 682 (சந்தன) அல்லது 0776 485 456 (புத்தி) அல்லது www.mva.lk என்ற இணையத்தளத்தில் அல்லது mvasrilanka@gmail.comஎன்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களை வர்த்தக கரப்பநதாட்ட சங்கம், இல. 33, டொரிங்டன் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .