Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம். அஜாத்கான்
வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வு வியாங்கல்லை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியிலே களுத்துறை வுளூஸ் அணியினரை எதிர்த்து கொழும்பு ஸ்மாஸ் அணி மோதியது.
இதில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் களுத்துறை வுளுஸ் அணி சம்பியனாக தெரிவானது.
சம்பியன் அணிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணப்பரிசும் கிறீன் லைன் வெற்றிக் கிண்ணமும், 2ம் இடத்தினைப் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த தொடரின் அதிகூடிய கோல்களை பெற்ற வீரருக்கு பத்தாயிரம் ரூபாயும் கிண்ணமும், சிறந்த கோல்காப்பாளருக்கு பத்தாயிரம் ரூபாயும் கிண்ணமும் ஒழுக்கமான அணிக்கு ஐயாயிரம் ரூபாயும் முறையே வழங்கப்பட்டன.
இறுதி நாள் நிகழ்வுகள் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர், லெப்டினன் ஏ.எம்.எம்.கியாஸின் முழுமையான வழி நடாத்தலுடன் நடைபெற்றது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
2 hours ago