R.Tharaniya / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுமுந்தன் வெளி விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி. மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகத்திலிருந்து உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (26) அன்று மாலை களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது காஞ்சிக்குடாஜெகன் விளையாட்டு கழகம் முதலிடத்தையும், சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுகழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கடந்த மூன்று நாட்களாகபோட்டிகள் இடம்பெற்ற இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.இப்போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 45 அணிகள் பங்குபற்றியிருந்தனர்.
இவ் விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் ,போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன், படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேள தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது போட்டியில்முதலிடம், இரண்டாம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும், கேடயங்களும், காசோலைகளும்வழங்கி வைக்கப்பட்டன.
வ.சக்தி




12 minute ago
24 minute ago
34 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
34 minute ago
5 hours ago