2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எக்ஸலன்ஸ் பாடசாலையின் மரதனோட்டப் போட்டி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 21 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மதுரங்குளி எக்ஸலன்ஸ் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வான மரதனோட்டப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

மதுரங்குளி போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் கடையாமோட்டை சந்தியிலிருந்து ஆரம்பித்த மரதனோட்டப்போட்டி பாடசாலையில் நிறைவு பெற்றது.

சஹீலான், செலான், செரண்டிப் ஆகிய மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  

சஹீலன், செலான் மற்றும் செரண்டிப் இல்லங்களைச் சேர்ந்த முஹம்மது அஸாம், முஹம்மது பாசித் மற்றும் முஹம்மது நதீர் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .