2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஒலிம்பிக் குழாத்தில் கிளியின் சரித்திரன்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 10 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் கோ. சரித்திரன் ஒலிம்பிக் போட்டி குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.  2028, 2032 ஒலிம்பிக் போட்டி இறுதிக் குழாத்தில் உயரம் பாய்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சரித்திரன் 2025ஆம் ஆண்டு  கணிதப் பிரிவில் கல்வி கற்கின்றார்.

இக்குழாமுக்கான முதலாம் கட்டத் தெரிவின்போது இலங்கை முழுவதிலிருந்தும் விளையாட்டில் திறமைமிக்க 202 மாணவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டாம் கட்டத்தில் 202 மாணவர்களில் தனிப்பட்ட ஆற்றல்களை பரிசோதித்து 141 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மூன்றாம் கட்டத்தில் இரண்டாம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 141 மாணவர்களிருந்து இறுதிக் கட்டத்துக்கு 56 மாணவர் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவராக சரித்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .