Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் வரிசையில் ஆசிய கிரிக்கெட் கோப்பையும் இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றாலும் கோப்பையை வாங்காமல் இந்திய அணி புறக்கணித்துவிட்டது. போட்டி முடிந்தவுடன் நேற்று மைதானத்தில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதிக் கொள்வது இதுதான் முதல்முறை. நடப்பு ஆசிய கோப்பை போட்டியில் முன்னதாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் இரண்டிலுமே பாகிஸ்தானை இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
இந்திய அணி வெற்றி
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் தாக்கம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்தது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் வீரர்களுடன் இந்தியா கைக்குலுக்கவில்லை என்ற சர்ச்சை வெடித்தது. மறுபக்கம் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், அந்த வெற்றி பஹல்காம் தாக்குதலில் பலியான மக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் சமர்பிப்பதாக கூறியிருந்தார்.
தொடர்ந்து இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்தபோது, பாகிஸ்தான் அணியின் வீரர் ஹாரிஸ் ராஃப் செய்த செயல் ஆகியவையும் சர்ச்சையாகியிருந்தது. நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 9வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. நள்ளிரவு நேரத்தில் இந்தியாவில் கூட வெற்றியை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
கோப்பை வேண்டாம்
ஆனால் துபாய் மைதானத்தில் இந்திய அணி கோப்பை, பதக்கம் உள்ளிட்டவற்றை புறக்கணித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடம் (பாகிஸ்தான் அமைச்சர்) கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி புறக்கணித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணி பிரசன்டேசனுக்கு தாமதமாக வந்ததாலும் இந்தியா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இந்திய வீரர்கள் சுப்மன் கில், குல்தீப், ரிங்கு, பௌலிங் பயிற்சியாளர் மோர்னே மார்கல் வெளியே வந்து பேட்டியளித்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதாமாக தான் பிரசன்டேசன் நடைபெற்றது. தொகுப்பாளர் சைமன் டளெல் இந்தியா கோப்பையை வாங்க மறுத்துவிட்டது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது என்றார். இந்திய அணி வீரர்கள் கோப்பை வாங்காமல் வெறும் கையுடன் தான் ஹோட்டல் திரும்பினார்கள்.
கடைசி நிமிட மாற்றங்கள்
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலராகவும் உள்ள மோசி நக்வி கோப்பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தாமதாமாக வந்தபோது அவர்களுக்கு எதிராகவும், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் நக்விக்கு பதிலாக, எமிரெட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவர் காலித் அல் ஜரோமி கோப்பை, பதக்கம் வழங்கி மரியாதை செய்வார் என்று தகவல் வெளியானது.
பாகிஸ்தான் வீரர்கள் பதக்கம் மற்றும் ரன்னர் அப்கான கோப்பையை வாங்கி சென்றார்கள். ஆனால் கடைசி நேர மாற்றங்களுக்கு பிறகும் இந்திய அணி கோப்பையை வாங்காமல் திரும்பினார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது.
16 minute ago
42 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
42 minute ago
56 minute ago