2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கராத்தேயில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 16 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எம். அஹமட் அனாம்

தேசிய மட்ட கராத்தே திறந்த போட்டியில் சாதனை படைத்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவித்தலும் கராத்தே சீருடை அறிமுகமும், பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

ஏ.எஸ்.டி. டோஜோ கராத்தே டு சோடோகான் அமைப்பினால் நாடளாவிய ரீதியில் உள்ள கராத்தே பயிற்சி மாணவர்களுக்கிடையில் குமிதே போட்டி (இருவர்களுக்கிடையிலானது) நடாத்திய போட்டியில் காத்தா போட்டி (தனிநபர்களுக்கானது) என்பன இடம் பெற்றது. இதில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து தரம் ஆறு தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டு 27 பதக்கம்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் ஒன்பது தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள், எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள மாணவர்களை பாடசாலை நிருவாகம் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .