Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் இந்த யுவதிக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்று, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் நடைபெற்றது.
இந்த யுவதியைக் கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றை கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஏற்பாடு செய்திருந்தது.
அந்தவகையில் அன்று காலை 9 மணிக்கு கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சமூகம் மற்றும் 642ஆவது படைப்பிரிவு இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் தங்கம் வென்ற இந்துகாதேவி, தச்சடம்பன் கிராமத்தில் இருந்து கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரை வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்ளின் பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையையுடன் பாடசாலை வளாகத்துக்குள் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்
கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ந. சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி முகுந்தன், 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி ஜி.டி .சூரிய பண்டார உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், துணுக்காய் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர், மாணவர், பெற்றோர், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து தனது திறமையை வெளிக்காட்டிய மாணவிக்கு பாடசாலை சமூகத்தால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுக் கேடயமும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, துணுக்காய் வலயக்கல்வி அலுவலக பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளாலும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
17 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
5 hours ago