குணசேகரன் சுரேன் / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு புங்குடுதீவு நசரேத் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றது.
இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் விலகல் முறையில் நடைபெறும் இத்தொடரில், நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில் இளவாலை சென். லூட்ஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே நசரேத் விளையாட்டுக் கழகம் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இதேவேளை, அன்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியொன்றில், மன்னார் சில்வெஸ்டர் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற திக்கம் இளைஞர்கள் விளையாட்டுக் கழகம் இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago