குணசேகரன் சுரேன் / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்னார் ஜோசப்வாஸ் யுனைட்டெட் அணி தகுதிபெற்றுள்ளது.
இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் விலகல் முறையில் இடம்பெற்றுவரும் இத்தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில் அல்வாய் மனோகரா அணியை எதிர்கொண்ட ஜோசப்வாஸ் யுனைட்டெட் அணி, போட்டியின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் காணப்பட்டு, பின்னர் பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இதேவேளை, அன்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகள் இரண்டில், கீரிமலை சிவானத்தா அணியை உடுப்பிட்டி நவஜீவன்ஸும் மணற்காடு சென். அன்ரனிஸை வதிரி டயமன்ஸூம் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago