Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 26 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
இவ்வருட நோன்புப் பெருநாளை முன்னிட்டு, புத்தளம் விருதோடை எள்ளுச்சேனை பிரதேசத்தில் இயங்கும் வெள்ளைப் புறா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள எள்ளுச்சேனை பிரிமியர் லீக் (ஈ.பி.எல்) கிரிக்கெட் சுற்றுப்போட்டி, எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இரவு நேர ஆட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுப் போட்டிகள் தொடர்ந்து மூன்று தினங்கள் இடம்பெறும்.
இதில், விருதோடை மற்றும் அண்மைய பிரதேசங்களைச் சேர்ந்த ஏழு கிரிக்கெட் அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. ஏழு ஓவர்களைக் கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30,000 ரூபாய் பணப் பரிசுடன் வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே 20,000 மற்றும் 10,000 ரூபாய் என்ற வகையில் பரிசில்கள் வழங்கப்பட உள்ளதாக, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
அத்துடன் சிறந்த துடுப்பாட்டக்காரர், பந்து வீச்சாளர், ஆட்ட நாயகன் போன்ற பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago