2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கிரிக்கெட்டில் சாதித்த விருதோடை வீரருக்கு வாழ்த்து மழை

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 23 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

வட மேல் மாகாண கிரிக்கெட் அணியில் இணைந்து சாதனை நிலை நாட்டிய புத்தளம் மதுரங்குளி விருதோடை கிராமத்தை சேர்ந்த எம்.ஏ.எம். அஸீமுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமுள்ளன.

தேசிய கிரிக்கெட் போட்டியில் வடமேல் மாகாண (வயம்ப) அணி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. இந்த அணியில் விருதோடை கிராமத்தைச் சேர்ந்த அஸீம் இணைந்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

அஸீம், தனது விருதோடை  கிராமத்திலும், அயல் கிராமங்களிலும் பிரபலமான அணிகளோடு இணைந்து  சிறப்பான முறையில் தனது அபார திறமைகளை வெளிக்காட்டி விளையாடியதன் மூலம் அனைவரையும் கவர்ந்து வடமேல் மாகாண அணி சார்பில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தார். 

இவர் தொடர்ந்தும் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி கிரிக்கெட் துறையில் சிகரம் எட்ட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் எனவும் விருதோடை ஐக்கிய இளைஞர் கழகம் உள்ளிட்ட பொதுமக்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .