Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- தீஷான் அஹமட்
இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்படும் 50 ஓவர்கள் கொண்ட 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டியில், மூதூர் மத்திய கல்லூரி மாணவன் உனைஸ் முஹமட் நுபைல் கிழக்கு மாகாண புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும், மூதூர் மத்ததிய கல்லூரிகளுக்குமிடையிலான போட்டி அண்மையில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மூதூர் மத்திய கல்லூரி மாணவன் முஹமட் நுபைல் 128 பந்துகளை எதிர்கொண்டு 228 ஓட்டங்களை பெற்று மாகாண மட்ட புதிய சாதனையை நிலை நாட்டினார்.இதில் ஆறு ஓட்டங்கள் பத்தும், நான்கு ஓட்டங்கள் 34 உம் உள்ளடங்கும்.மூதூர் மத்திய கல்லூரி இம்முறையே முதன் முறையாக பாடசாலை மட்டக் கிரிக்கெட் போட்டியில் பங்கு கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மூதூர் மத்திய கல்லூரி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 393 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களையே பெற்று 267 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதன்போது முஹமட் நுபைல் கருத்துத் தெரிக்கையில், “நான் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளேன்.இதற்கு ஒத்துழைத்த பயிற்றுவிப்பாளர்கள், அதிபர், பழைய மாணவர் சங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது பாடசாலையில் வலைப்பயிற்சி செய்வதற்குகூட வசதிகள் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் தேசிய மட்டத்தில் பிரகாசிப்பேன்” எனக் கூறினார்.
31 minute ago
35 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
5 hours ago
5 hours ago