2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வளாகத்தில் உடற்பயிற்சி நிகழ்வு

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பைஷல் இஸ்மாயில்

 தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டுத் திறனையும், உடற்பயிற்சித் திறனையும் விருத்தி செய்யும் வகையில் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் நிகழ்வானது கிழக்கு மாகாண முதலமைச்சரின் வளாகத்தில் இடம்பெற்றது.

முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு விளையாட்டு ஆசிரியர் ஜே. சுவாசினியின் வழிகாட்டலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஆளுநர் செலயலகம், முதலமைச்சு, சுகாதார அமைச்சு, மாகாண ஆயுர்வேத திணைக்களம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், உள்ளிட்ட பல மாகாண திணைக்களங்களின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X