2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குத்துச் சண்டை போட்டியில் கந்தளாய் மாணவர்கள் வெற்றி

Freelancer   / 2023 மே 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

47 ஆவது அகில இலங்கை எல்.வி.ஐயவீர ஞாபகர்த்த குத்துச் சண்டை போட்டியில் கந்தளாய் பேராற்றுவெளி  முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கம் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கந்தளாய் மண்ணுக்கும் பெருமையை தேடித்தந்துள்ளதாக பாடசாலை அதிபர் எச்.எம்.நௌஸாத் தெரிவித்தார்.

கந்தளாய் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இப் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களான பி.எம்.அஹ்சான் மற்றும் டி.எம்.இல்ஹான் ஆகியோர் இருபது வயதுப் பிரிவின் கீழ் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளதாக அப்பாடசாலையின் முதல்வர் தெரிவித்தார்.

பாடசாலை வரலாற்றிலே முதல் தடவையாக கிடைக்கப்பெற்ற வெற்றியாகும் எனவும் அதிபர் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு குத்துச் சண்டை பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர் கமால் ஐயசிங்க மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.ஜே.எ.நிஸாமி,அத்துடன் பாடசாலை விளையாட்டு பிரிவு பொறுப்பாரியர் எம்.எஸ்.எம்.கபார்கான் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

எப்.முபாரக்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .