2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குத்துச்சண்டையில் பிரகாசித்த சென். பற்றிக்ஸ்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். தில்லைநாதன்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி 2 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.

முல்லைத்தீவு வித்தியானந்த  கல்லூரியில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் 16 வயது பிரிவின் 44 கிலோ கிராம் தொடக்கம் 46 கிலோ கிராம் வரையான எடைப் பிரிவில் ரு. சுலக்சன், 20 வயதுப் பிரிவின் 46 கிலோ கிராம் தொடக்கம் 49 கிலோ கிராம் வரையான எடைப் பிரிவில் ரா. விசாலகன் ஆகியோர் முதலிடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதேபோன்று, 20 வயதுப் பிரிவின் 46 கிலோ கிராம் தொடக்கம் 49 கிலோ கிராம் வரையான எடைப் பிரிவில் உ. அநெக்ஸ் மூன்றாமிடத்தையும்  20 வயதுப் பிரிவின் 56 கிலோ கிராம் தொடக்கம் - 60 கிலோ கிராம் வரையான எடைப் பிரிவில் ஆர். றொசினோ மூன்றாமிடத்தையும் பெற்று வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .