R.Maheshwary / 2022 நவம்பர் 16 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி கபில
இலங்கைக்கு கௌரவத்தையும் மதிப்பையும் தேடித் தந்துள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் போட்டிகளின் நடுவருமான குமார தர்மசேனவை வரவேற்கும் நிகழ்வு இன்று (16) காலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் நடைபெற்றது.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சார்பாக விளையாடிய குமார தர்மசேன, 2009ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடுவராக இணைந்துக்கொண்டதுடன் 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் உலகில் சிறந்த கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
குமார தர்மசேன இதுவரை 75 டெஸ்ட் போட்டிகள், 118 ஒரு நாள் போட்டிகள், 42 இருபதுக்கு இருபது போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.
கட்டாரில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.


9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026