R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலானவிளையாட்டு விழா (2025) அண்மையில் களுதாவளை கெனடி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
அதில் குழுநிலை, மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளின் அடிப்படையில் களுதாவளை கெனடிவிளையாட்டுக் கழகம் இம்முறை பிரதேச மட்டத்தில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குழுநிலை போட்டிகளில் முதலாம் இடத்தை கிரிக்கெட் - ஆண்கள், எல்லே - ஆண்கள், எல்லே - பெண்கள், கபடி - பெண்கள், வலைப்பந்து - பெண்கள், கரப்பந்து - பெண்கள் என 06 தங்கப்பதக்கத்துடன், கிரிக்கெட் - பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளது.
மெய்வல்லுனர் போட்டிகளில் இதுவரை காலமும் இல்லாத வகையில் அதிக பதக்கங்களை பெற்றுள்ளது. அந்த வகையில் 30 தங்கப்பதக்கமும், 20 வெள்ளிப்பதக்கமும், 20 வெண்கலப் பதக்கமும் அடங்கலாக 70 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக இம்முறை கெனடி பெண்கள் அஞ்சல் அணியினர் இரண்டு அஞ்சல் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. பிரதேச மட்டத்தில் இரண்டாம் இடத்தை செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம் பெற்றுள்ளது.
அக்கழகம் 06 தங்கப்பக்கங்களுடன், 10 வெள்ளிப்பதக்கம்03 வெண்கலப் பதக்கம், என 19 பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஆண்கள் பிரிவில் சாம்பியன்ஸாக கெனடி விளையாட்டு கழகத்தின் வீரர்களான தி.குகப்பிரியன் (200,400,800 மீற்றர்)நி.தருண் (1500,5000,10000 மீற்றர் ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பெண்கள் பிரிவில் நியூட்டன் கழக ஜீ.வாசனாஞ்சலி (400,800,1500 மீற்றர்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.




வ.சக்தி
9 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
42 minute ago