Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு நேற்றுமுன்தினம் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
காரைதீவு விளையாட்டுக்கழக தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதி களாக கழக போசகர்களான வி.ராஜேந்திரன் மற்றும் வி.ரி. சகாதேவராஜா கழக சிரேஷ்ட உறுப்பினர் கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் அணிக்காக புதிய ஜேர்சியை அன்பளிப்பு செய்த கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் அருணந்தி தயாகரன்(கட்டார்) அங்கு நன்றிகூறி பாராட்டப்பட்டார்.
புதிய சீருடைகளைப்பெற்ற கிரிக்கெட் அணியினர் புதிய உத்வேகத்துடன் உற்சாகத்துடன் விளையாடி கடந்த காலங்களை விட மேலும் சாதனைகளைக் கழகத்திற்கு பெருமைகளைச் சேர்க்கவேண்டுமென அதிதிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .